இந்தோனேஷியாவில் திருமணத்துக்குமுன் பாலுறவு வைத்துக் கொண்ட ஜோடிக்கு தண்டனையாக பொது மக்கள் முன்னிலையில் 100 பிரம்படிகள் கொடுக்கப்பட்டன.
நேற்று முன் தினம் அந்த இளம்பெண்ணும் அவரது காதலனும் பாலுறவு கொள்ளும்போது கையும் களவுமாக சிக்கினர்.
22 வயதுடைய இருவருக்கும் தண்டனையாக ஆளுக்கு 100 பிரம்படிகள் கொடுக்கப்பட்டன.
அடிக்கப்படும்போது அந்த இளம்பெண் வலி தங்காமல் கதறியழுதார். ஒவ்வொரு முறை அவர் கதறும்போதும், அடிப்பது நிறுத்தப்பட்டு, பெண் மருத்துவர் ஒருவர் அவரை பரிசோதித்து, அனுமதியளித்த பின்னரே மீண்டும் அந்த பெண் அடிக்கப்பட்டார்.
இஸ்லாமிய சட்டங்களை மீறுபவர்களுக்கு பிரம்படிகள் தண்டனையாக வழங்கப்படுவது சுமத்ரா தீவிலுள்ள Aceh பகுதியில் கடுமையாக பின்பற்றப்படுகிறது.
சிறுவர்கள் இந்த தண்டனைகளை பார்க்கக்கூடாது என்பதால் Lhokseumawe பகுதியிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் வைத்து இந்த தண்டனைகள் வழங்கப்பட்டன.