பிரான்சின் Romainville நகரில் நடந்த குழு மோதல் ஒன்றில், 20 வயது இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Romainville நகரில் உள்ள Yuri Gagarin பகுதியில், கடந்த ஜூலை மாதம் 13ஆம் திகதி இரவு குழுக்களுக்கு இடையே மோதல் நடந்துள்ளது. இதில் 20 வயது இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
கத்திக்குத்துக்கு உள்ளான குறித்த இளைஞரை பொலிசார் சடலமாக மீட்டனர். அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று குறித்த இளைஞரை கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்தனர்.
அந்நபரின் மீது ஏற்கனவே பல்வேறு வன்முறை குற்றச்சாட்டுகள் உள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர். Romainville நகரில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பல்வேறு குழு மோதல்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளதாக பதிவாகியுள்ளது.