நடுவானில் மாணவி விமானத்திலிருந்து வீழ்ந்து பலியான சோகம்!

மடகாஸ்கரில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து வருபவர் அலானா கட்லாண்ட். உயிரியல் பாடப்பிரிவில் படித்து வரும் இவர் இண்டர்ன்ஷிப்புக்காக மடகாஸ்கர் சென்றிருக்கிறார். பல இடங்களில் உயிரினங்கள் குறித்த ஆய்வுகளை சேகரித்த அவர் சிறிய ரக விமானமொன்றில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

சவானா நிலப்பகுதியின் மேல்பரப்பில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது விமானத்திலிருந்து தவறி விழுந்தார் அலானா. சுமார் 3500 அடி உயரத்திலிருந்து விழுந்த அலானா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

விமானத்திலிருந்து அவர் தவறி விழுந்தது எப்படி என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆராய்ச்சிக்காக சென்ற தங்கள் மகள் இறந்துவிட்டாள் என்ற செய்தி அலனாவின் பெற்றோரை துயரில் ஆழ்த்தியுள்ளது.