ஒருவரை ஊக்குவித்தலும் ஒருவித உதவியே !

கிளிநொச்சி A-9 வீதியில் இரணைமடு சந்தியில் இருந்து முறுகண்டி நோக்கிய வீதியில் சுமார் 500 மீற்றர் தூரத்தில் செல்போன் குளிர்பான வியாபாரி ஒருவரின் குளிர்பான வண்டி ஒன்று காணப்படுகிறது.

பயணத்தின் களைப்பை போக்க சர்பத் குடிப்பதற்காக அவரது கடைக்கு செல்வோர் எல்லோரையும் இன்முகதுடன் வரவேற்பார் அந்த வியாபாரி .

ஒரு மாதம் முன்னதாக முதல் தடவை அங்கு வந்த போது வழங்கிய அதே தரம் தற்போதும் இருக்குமோ என நினைத்தபடி இரண்டு சர்பத் ஓடர் செய்தோம்.

சுமார் 5 நிமிடத்தில் சர்பத் எங்கள் கைகளுக்கு வந்தது. ஆஹா அருமையான சுவை. ஒரு சர்பத் விலை 100/- ஆனால் வயிறு நிறைவடைந்து விட்டது.

பின்னர் வியாபாரிக்கு வாடிக்கையாளருக்கும் இடையில் இடம்பெற்ற சில சம்பாசனைகள்.

கேள்வி 1:

ஒரு சர்பத் விற்றால் சுமார் எவ்வளவு லாபம்.

பதில்:

20-30/- வரை கிடைக்கும்.

கேள்வி: 2

ஐஸ் சர்பத் ஒன்றுக்கு எத்தனை கரண்டி ஐஸ் கிறீம் போடுகிறீர்கள்

பதில்:

3 கரண்டி ஐஸ் கிறீம்

(கிறீம் சர்பத் ஒன்றிக்கு பெரிய குளிர்பான கடைகளில் கூட ஒரு கரண்டி ஐஸ் கிறீம் தான் போடுவார்கள் )

கேள்வி 3:

இந்த விலைக்கு விற்க கட்டுபடியாகுமா?

பதில்:

ஓம் தம்பி எனக்கு அதிக லாபம் தேவை என நான் ஆசைப்படலை. எனக்கு வாடிக்கையாளர்கள் தேவை. ஒரு தடவை வருபவர்கள் மறுபடியும் உங்களை மாதிரி தேடி வரனும்.

அதிக லாபத்தில் சுமார் வியாபாரம் செய்வதை விட குறைந்த லாபம் என்றாலும் கூடிய வியாபாரம் தேவை தம்பி.

இறுதிக் கேள்வி:

வழமையாக இதே இடத்தில் தான் வியாபாரம் செய்வீர்களா?

பதில்:

ஆம் ஆம். ஞாயிற்றுக்கிழமை மட்டும் வியாபாரத்திற்கு வருவதில்லை. ஆராதனைக்கு தேவாலயம் சென்றுவிடுவேன். ஆகவே விடுமுறை எடுப்பது ஞாயிற்றுக்கிழமை தான்.

எதற்காக இந்த பதிவு என நீங்கள் யோசிக்கலாம். ஏன்னெனில் எமது சிறு வியாபாரிகளின் தன்னார்வ முயற்சிகளை ஊக்குவித்தல் வேண்டும் என்பதே ஆகும்.

நீங்களும் உங்கள் பயணத்தின் இடையே இளைப்பாற ஒதுங்கும் தருணங்களில் இவர்கள் போன்ற சிறு வியாபார முயற்சியாளர்களின் முயற்சியினை ஊக்குவியுங்கள். பண உதவிதான் செய்யவேண்டும் என்பது இல்லை. இது மாதிரி ஊக்குவித்தல் கூட அவர்களின் முன்னேற்றத்திற்கு நாம் செய்யும் உதவியாக இருக்கட்டுமே!