தாய்லாந்தில் 6 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்து நாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சின் மாநாடு நடைபெற்று வருகின்றது. இந்த மநாட்டில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
அத்தோடு குறித்த மாநாட்டில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் போம்பியோவும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அங்கு இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் 4 பேர் காயமடைந்துள்ள நிலையில், பதற்றமான நிலையும் உருவாகிள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.