புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் இளைஞன் ஒருவர் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவரை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது,
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,
கடந்த 2010-ம் ஆண்டு வவுனியாவை சேர்ந்த 24 வயது பெண்ணொருவருக்கு லண்டனை சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமண தரகர் மூலம் பேசி, பெரும் திரளான பணங்களை சீதனமாக கொடுத்து இந்தியாவில் வைத்து திருமணம் செய்து கொடுத்தனர் பெண்ணின் பெற்றோர்.
திருமணம் முடிந்த மூன்று மாதங்களில் பெண்ணை இந்தியாவில் விட்டு விட்டு நான் போய் உன்னை பொன்சர் மூலம் எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு லண்டன் புறப்பட்டார் மாப்பிள்ளை.
லண்டன் சென்ற மாப்பிள்ளை எட்டு வருடங்களாக இப்ப பொன்சர் சரியாகிவிடும் இந்த வருடம் நீ வந்துவிடலாம் என பல பொய்கள் சொல்லி தொலைபேசிகளிலே நாட்களை கழித்துள்ளார்.
பொறுமையிழந்த குறித்த பெண் மாப்பிள்ளையுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை பிடித்து விட்டு வவுனியாவுக்கு வந்து இளமையையும் தொலைத்துவிட்டு தற்போது பல சோகங்களுடன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.