தமிழ்நாடு உளுந்தூர் பேட்டை பிரதேசத்தில் பள்ளி மாணவனை இரு பெண்கள் உள்ளிட்ட குடும்பம் சேர்ந்து வெட்டிக் கொன்ற கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் முறைதவறிய காதலால் நிகழ்ந்ததாக தெரியவருகின்றது.
குறித்த கிராமத்தை சேர்ந்த கேசவன் – பராசக்தி தம்பதியரின் இளைய மகன் சிவக்குமார் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,
கேசவன் வெளி நாட்டில் தங்கி வேலைபார்த்துவரும் நிலையில், இங்கு தனது தாய் பராசக்தி, அண்ணன் சரத்குமார் மற்றும் அக்காவுடன் வசித்து வந்த 10 ஆம் வகுப்பு மாணவனான சிவக்குமார் கொல்லப்பட்டுள்ளார்.
காப்புக்காட்டில் சிவக்குமாரின் சடலத்தை கைப்பற்றிய பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணையை முன்னெடுத்தனர்.
சிறுவன் வீட்டில் இருந்து சென்றுள்ளான் என்பதால் நாய் அங்கு சென்று படுத்துக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த கொலை வழக்கில் சிறுவனின் குடும்பமே பொலிஸிடம் சிக்கி உள்ளது. சிறுவனின் தந்தை வெளி நாட்டிற்கு சென்று விட்டதால், தாய் பராசக்தியின் நடத்தை சரியில்லை என்று கூறப்படுகிறது.
இதனை சிலமுறை நேரில் பார்த்த மூத்த மகன் சரத்குமாருக்கு, அவனது சித்தியுடன் முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இவர்களின் பழக்கத்தை பார்த்து விட்டதால் உடன் பிறந்த தங்கையையும் மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான் சரத்குமார்.
வெளியில் சொன்னால் தீர்த்துக் கட்டிவிடுவேன் என்ற சரத்குமாரின் மிரட்டலுக்கு பயந்து அந்த பெண்ணும் எதையும் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். அண்மையில் ஒரு நாள் சரத்குமார் தனது தங்கையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதை சிறுவன் சிவக்குமார் பார்த்து விட்டதாக கூறப்படுகிறது.
இதை எங்கே அவன் ஊராரிடம் சொல்லி விடுவானோ என்று அஞ்சி அவனை தீர்த்துக்கட்ட திட்டம் வகுத்துள்ளான் சரத்குமார். சம்பவத்தன்று தனது சித்தியிடம் நமது விவகாரம் தம்பி சிவக்குமாருக்கு தெரிந்துவிட்டதால், அவனை கொலை செய்ய வேண்டும் என்று அவரை துணைக்கு அழைத்துள்ளான் சரத்குமார்.
அதே நேரத்தில் அவனது தங்கையையும் துணைக்கு அழைத்துக் கொண்டு 3 பேரும் சேர்ந்து சிவக்குமாரிடம் உடும்பு பிடிக்கலாம் என்று ஏமாற்றி, கொலை செய்யும் நோக்கில் காப்புக்காட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து உடும்பு ஓடுவதாக கூறி, அதனை பிடிப்பதற்காக பாறை இடுக்கில் உற்று நோக்கவைத்த சரத்குமார், தான் கையுடன் எடுத்துச்சென்றிருந்த கரும்பு வெட்டும் அரிவாளால் சிவகுமாரின் தலையை பிடித்து அறுத்துள்ளான். அப்போது உஷாராகி தப்பித்து ஓட முயன்ற சிவக்குமாரை அவனது சித்தியும், சகோதரியும் சேர்ந்து கால்களை பிடித்துக் கொள்ள காமம் கண்ணை மறைக்க தனது உடன் பிறந்த தம்பி என்றும் பாராமல் அவனது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளான் சரத்குமார் என்கின்றனர் காவல்துறையினர்.
கொலை செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து ஊருக்குள் வந்து தம்பியை தேடுவது போல நடித்த சரத்குமார், ஊருக்கு வெளியே நன்கரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காப்புக்காட்டு பகுதிக்கு சென்று தம்பியின் சடலத்தை கண்டுபிடித்ததாக கூறியதால், அவன் மீது சந்தேகம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு பெண்களையும் தனது முறை தவறிய இச்சைக்கு பயன்படுத்தியதோடு, கொலை சம்பவத்திலும் சரத்குமார் சாமர்த்தியமாக பேசி ஈடுபட வைத்து உள்ளது அந்த பெண்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரத்குமார், அவனது சித்தி, தங்கை ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை பறிமுதல் செய்தனர்.