உத்திரபிரதேச மாநிலத்தில் மனைவியை பந்தயமாக வைத்து விளையாடிய கணவன் தோல்வியடைந்ததால், கூட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார்.
அந்த மனுவில், மது போதைக்கு அடிமையாகியிருந்த தன்னுடைய கணவன் சூதாட்டம் விளையாடும் பழக்கம் கொண்டவர். அடிக்கடி வீட்டிற்கு வரும் கணவரின் நண்பர் அருண் மற்றும் உறவினர் அனில் ஆகியோருடன் மது அருந்திவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர் கையில் இருந்த பணம் அனைத்தையும் இழந்த பின்னர், மனைவியை வைத்து சூதாடியுள்ளார்.
அதிலும் தோல்வியடைந்த பின்னர், இருவரும் சேர்ந்த அந்த பெண்ணை துஸ்பிரயோகம் செய்துள்ளனர். இந்த கொடூரத்தை தாங்க முடியாத அந்த பெண் கோபித்துக்கொண்டு மாமா வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அவரை பின் தொடர்ந்து சென்ற கணவன் தன்னுடைய தவறுக்கு மன்னிப்புக்கோரி மனைவியை வீட்டிற்கு திரும்ப அழைத்து வந்துள்ளான். வரும் வழியிலே காரை நிறுத்தி மீண்டும் தன்னுடைய நண்பர்களை துஸ்பிரயோகம் செய்ய அனுமதித்துள்ளான்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்ததும் பொலிஸார் வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளனர் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரின் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.