இந்தோனேஷியாவில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இதனால் பல சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று Java மற்றும் Sumatra தீவுகளில் 6.9 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தீவின் தெலுக் பெதுங் நகரிலிருந்து சுமார் 227 கிலோமீற்றர் (141 மைல்) தொலைவில் 59 கிலோமீற்றர் (37 மைல்) ஆழத்தில் உணரப்பட்டுள்ளதால் சுனாமி ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் United States Geological Survey வெளியிட்டுள்ள தகவலில், Banten மாகாணத்தில் இருக்கும் Pandeglang மற்றும் Panaitan தீவின் தெற்கு பகுதியில் சுனாமி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து எந்த ஒரு தகவல்களும் வெளியாகவில்லை.