இருக்கிற இடத்திலிருந்து இன்னொரு பல்டியடித்தது ஈரோஸ்!

ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் கூட்டணியில் இருந்து வெளியேறி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன கூட்டனியில் ஈரோஸ் கட்சி இணைந்து கொண்டுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டனியின் சின்னத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப், துஸ்யந்தன் தலைமையிலான ஈரோஸ் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்காக ஈரோஸ் அமைப்பினரும் வன்னியில் கடும் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டனி சின்னத்தில் போட்டியிட்ட ஈபிஆர்எல்எப் ஒரு நேரடி வெற்றியாளர் உட்பட 11 ஆசனங்களை பெற்றிருந்தது. அதில் ஈபிஆர்எல்எப் தனக்கு கிடைத்த ஆசனங்களில் வவுனியா வடக்கில் தமிழ்செல்வன் மற்றும் வவுனியா தெற்கு தமிழ்
பிரதேச சபையில் சசிதரன் ஆகியோரை ஈரோஸ் சார்பில் உறுப்பினர்களாக நியமித்தது.

இந்நிலையில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடக்கம் ஈபிஆர்எல்எப் கட்சியுடன் இணந்து செயற்பட்ட ஈரோஸ் தற்போது மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டனி அமைத்துள்ளது.