யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று இரு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் நடத்துனர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் து தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அழகுசாதனப் பொருள்களை விற்பனை செய்பவர் சிலர் தமது வாகனத்தை பேருந்து நிலையத்துக்குள் கொண்டு செல்ல முற்பட்ட போது அதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் அனுமதிக்கவில்லை.
இதன் காரணமாக பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் அவர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து அங்கு கூடிய இ.போ.ச. சாரதிகள், மற்றும் நடத்துனர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு ஆதரவாக நின்றனர்.
இந்நிலையில் வியாபாரிகள் சிலர் மற்றும் முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவரும் இணைந்து கடைகளுக்குள் இருந்த கம்பிகள், கத்தரிக்கோலை எடுத்து வந்து பாதுகாப்பு உத்தியோகத்தரையும் நடத்துனரையும் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தினால் படுகாயமடைந்த நடத்துனர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணையினை முன்னெடுத்துள்ளனர்.