குருநாகல் மெல்சிரிபுரவிலுள்ள ஹொட்டல் அறையொன்றில் இருந்து 20 வயது யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது மரணத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் நகரில் தனியார் வகுப்பிற்கு சென்ற தமது மகள் வீடு திரும்பவில்லையென, கடந்த 29ம் திகதி அலவ பொலிசில் பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
மறுநாள் அவரது உயிரற்ற உடல் ஹொட்டலில் மீட்கப்பட்டது.
கவீஷா மதுரங்கி விக்ரமசிங்க என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி இவர்.
அவரது ஆண் நண்பரின் தொலைபேசியிலிருந்து வந்த அழைப்பொன்றை நம்பியே அவர ஹொட்டலிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
அவரது ஆண் நண்பர் ஹொட்டல் அறையில் சிக்கலொன்றில் மாட்டுப்பட்டுள்ளதாக, அவரது தொலைபேசியின் வழியான நண்பரின் நண்பரான ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்தே, அந்த ஹொட்டலிற்கு யுவதி சென்றதாக கூறப்படுகிறது.
ஹொட்டலில் யுவதியின் அலறல் சத்தம் கேட்டு, பணியாளர் ஒருவர் அங்கு சென்றிருக்கிறார். எனினும், தமக்கிடையிலான தனிப்பட்ட சிறிய முரண்பாடு, இதில் நீங்கள் தலையிட வேண்டாமென அந்த ஆண், பணியாளரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் காதலர்கள் என நம்பிய பணியாளர் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.
பின்னர் யுவதியின் சடலம் ஹொட்டல் அறையில் இருந்து கொகரெல்ல பொலிசாரால் மீட்கப்பட்டது.
கைதான இளைஞர், இந்த கொலையை புரிந்ததை ஏற்றுக்கொண்டுள்ளார்.