இயக்குனர் சேரன் ஒரு காலத்தில் முன்னணி இயக்குனராக இருந்து பல கவித்துவமான படைப்புக்களை கொடுத்தவர். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்துள்ளார்.
நேற்று முன்தினம் சேரனை நடிகர் சரவணன் வாடா போடா என கூறும் அளவுக்கு அவமானப்படுத்தி பேசினார். இது ரசிகர்கள் மட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இந்நிலையில் சேரன் உடனே பிக்பாஸை விட்டுவெளியேற வேண்டும் என இயக்குனர் வசந்தபாலன் கூறியுள்ளார்.
“இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் பாலுகேந்திராவுடன் ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள். பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு உங்களின் உயரம் தெரியாது. நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்று தான் நினைப்பார்கள். அறியாமை என்ன செய்ய…… உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள். இயக்குனர் சங்கப் பதவியில் கௌரவக்குறைவு ஏற்பட்ட போது உடனே அதை விட்டு வெளியேறினீர்கள். ஆகவே லைஞன் எந்த நிலையிலும் அவனின் மேன்மையை எந்த கீழ்மைக்கும் உட்படவிடுதல் வேண்டாம்” என வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.