அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு இலங்கை இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது…!

இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் கிடையாது என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் எச்சரிக்கைக்கு இலங்கை இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்தாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தினால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தொடர்பில் உலக செய்திச் சேவை ஒன்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவிடம் வினவியபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து இதுவரை தமக்கு எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும், அவ்வாறான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில், அது குறித்து மக்களுக்கு அறிவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படாத வகையில் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுமித் அத்தபத்து இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.