துபாயில் வேலை கிடைக்காமல் ஊருக்கு திரும்பிய நபருக்கு லொட்டரியில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்துள்ள நிலையில் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தின் ஜக்ரான்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விலாஸ் ரிக்காலா. துபாயில் ஓட்டுனராக பணியாற்றி வந்த அவர், அங்கேயே வேறு வேலை தேடியுள்ளார்.
ஆனால், வேலை தேடும் முயற்சி தோல்வியடையவே, கடந்த 45 நாட்களுக்கு முன்னர் நாடு திரும்பி, சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.
ஊருக்கு திரும்பும் முன்னர், துபாயில் 2 ஆண்டுகளுக்கான affle லொட்டரி சீட்டுகளை ரிக்காலா வாங்கியுள்ளார். மேலும், துபாய் ஷாப்பிங் ஸ்பெஷல் லொட்ரி டிக்கெட் ஒன்றும் வாங்கியுள்ளார்.
லொட்டரி டிக்கெட் வாங்கவும், அவர் தனது மனைவியிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில், ரிக்காலா வாங்கிய லொட்டரி சீட்டுக்கு 4.08 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசாக விழுந்துள்ளது.
பரிசுத்தொகை இந்திய மதிப்பில் ரூ.284,332,500 ஆகும். விவசாயம் மூலம் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகவே வருவாய் ஈட்டி வந்த ரிக்காலாவின் குடும்பம் தற்போது கோடீஸ்வர குடும்பமாக மாறியுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், எனது மனைவி பத்மாவே இதற்கான முக்கிய காரணம். துபாயில் இருந்து வீட்டுக்கு திரும்பி வரக்கூட என்னிடம் பணம் இல்லை. எனினும், லொட்டரி டிக்கெட் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதனால், மனைவியின் சேமிப்பில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் கேட்டுப்பெற்றேன் என்று கூறியுள்ளார்.