வெள்ளவத்தை, மயூரா பிளேஸ் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் பதற்றமான நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அங்கு விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் குவிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மயூரா பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது. எனினும் பள்ளிவாசலுக்கும் இந்த மோதலுக்கும் சம்பந்தம் இல்லை என குறிப்பிடப்படுகின்றது.
அங்கு கட்டுமானப்பணியை மேற்கொள்ளும் நபர்களுக்கு இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதில் வீட்டு கண்ணாடிகள், வாகனங்களின் கண்ணாடிகள் என்பட சேதமாக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் தற்போது அப்பகுதியில் நிலமையை பொலிஸார் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.