ரஷ்யாவில் சிறை அதிகாரி ஒருவர், பணத்திற்காக ஒரு குடும்பத்தையே கொன்று காரில் அடைத்து கடலில் மூழ்கடித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.
29 வயதான ராவன் சமர் என்ற சிறை அதிகாரியே 3,200 பவுண்டு பணத்திற்காக இக்குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமியை கட்டாயப்படுத்தி பெற்றோரை சுட்டுக் கொன்றதை பார்க்க வைத்த சமர், பின்னர், காரில் பெற்றோர்கள் உடலுடன் உயிருடன் சிறுமியை அடைத்து பூட்டி, காரை கடலில் மூழ்கடித்துள்ளார். கடலில் இருந்து கார் எடுக்கப்பட்ட போது, 4 வயது சிறுமி காரின் முன் இருக்கையில் இருந்த தனது தந்தையை கட்டியணைத்த படி பிணமாக இருந்துள்ளார்.
கிரிமியாவில் உள்ள நீதிமன்றத்தால், கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்ததற்காக சமருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், ரஷ்யா சட்டங்களின் கீழ் ஒருபோதும் பரோல் அல்லது விடுவிக்கப்பட மாட்டார், அவர் கடைசி மூச்சி வரை சிறையிலேயே இருக்க வேண்டும்.
ஆனால், ரஷ்ய மக்கள், இக்கொடூரமான செயலில் ஈடுபட்ட சமருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என பல ஆயிரம் பேர் கையெழுத்திட்ட கடிதத்தை அதிபர் புடினுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.