நல்லைக் கந்தனை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் கடும் சோதனைகளுக்கு பின்னரே அனுமதி..!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவின் கொடியேற்றம் திருவிழா இன்று மிகவும் பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது .

பக்தர்கள் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்திய பின்னரே ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.உடல் சோதனையும்,சில நுழைவாயில்களில் ஸ்கானர் மூலம் உடல் சோதனைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.பக்தர்கள் எடுத்துச் செல்லப்படும் உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

பெண் பக்தர்கள் சோதனைக் கூடங்களுக்கும் ஆண்கள் வெளியிலும் உடல் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறனர். அத்துடன், சில நுழை வாயில்களில் பொலிஸார் ஸ்கனர் மூலம் உடல் சோதனைகளை முன்னெடுக்கின்றனர்.

மேலும், அடியவர்களால் எடுத்துச் செல்லப்படும் உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், அடியவர்கள் அதிகாலை தொடக்கம் ஆலயத்துக்கு வருகை தந்து, நேர்த்திகளை நிறைவேற்றி வருகின்றனர்.