அதிகாலையில் 16 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய 36 வயது தாய்.. நடந்த விபரீத சம்பவம்

தமிழகத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் ஏற்பட்ட தகராறு காரணமாக ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தாய்-மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் நெய்க்காரன்பட்டியில் கடந்த ஞாயிறன்று அதிகாலை ரயில் தண்டவாளத்தில் 2 பெண்கள் சடலமாக கிடந்தனர்.

அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து, அங்கு விரைந்த பொலிசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விசாரணையில், உயிரிழந்த இருவரும் கண்ணையன் என்பவருடைய மனைவி கண்ணகி (36) என்பதும், இவர்களது 16 வயதான மகள் அகல்யா என்பதும் தெரியவந்தது.

கடந்த சனிக்கிழமையன்று ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கண்ணகி மற்றும் மகள் அகல்யா ஆகிய இருவரும் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஒருவர், நீங்கள் 2 பேர் மட்டும் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறீர்கள், கண்ணையனுக்கு ஏன் வாங்கி கொடுக்கவில்லையா? என்று கேட்டுள்ளார்.

அதற்கு கண்ணகி, அவர் சாராயம் தான் குடிப்பார். ஐஸ்கிரீம் சாப்பிட மாட்டார்’ என கிண்டல் செய்துள்ளார். மேலும் குடிகாரனுக்கு எதற்கு வாங்கி கொடுக்க வேண்டும் என்று அந்த நபரிடம் கூறியதாக தெரிகிறது. இது குறித்து அறிந்த கண்ணையன் ஏன் அப்படி சொன்னாய் என மனைவியுடன் சண்டை போட்டார். மேலும் அடுத்தவர் முன், தன்னை அவமானப்படுத்தி விட்டதாக கண்ணையன் கூறி உள்ளார்.

இதனால் மனமுடைந்த கண்ணகி, தனது மகளுடன் வீட்டில் இருந்து அதிகாலை வெளியே சென்று ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.