கமல்ஹாசனின் மருதநாயகம் படம் மீண்டும் துவங்கப்படுமா என்பது தான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கான பணிகளிலும் கமல் இதற்குமுன்பு துவங்கினார். ஆனால் இதுவரை படம் பற்றி எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் இது பற்றி நடிகர் கமல்ஹாசனிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல் “இப்போது நான் முயற்சி செய்துகொண்டிருக்கும் விஷயம் அது. நான் கொஞ்சம் தான் எடுத்து வச்சிருக்கேன். வேலை அதிகமாகிவிட்டது. வேறொரு திட்டம் வைத்திருக்கிறேன். இதற்கான பதிலை தொழிநுட்பமும், காலமும் தான் சொல்ல வேண்டும்” என கமல் கூறியுள்ளார்.