தன்னைப்பற்றி வந்த வீடியோவிற்கு ரஜினி கொடுத்த ரியாக்ஷன்- ஜெயம் ரவி

பெரிய நடிகர்களை கலாய்க்கும் வகையில் எந்த பட வீடியோவிலும் காட்சி வந்துவிடக்கூடாது. அப்படி வந்தால் அவரது ரசிகர்கள் என்ன செய்வார்கள் என்றே தெரியாது.

ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி பட டிரைலர் அண்மையில் வெளியானது அதில் ரஜினியை அவர்களை கலாய்க்கும் வகையில் ஒரு காட்சி இடம்பெற பெரிய பிரச்சனை ஆனது.

இதுகுறித்து ஜெயம் ரவி ஒரு பேட்டியில், தலைவரை யாராவது சொன்னால் கோபப்படும் ரசிகர்களில் நானும் ஒருவர். இப்பட டிரைலரை பார்த்துவிட்டு ரஜினி அவர்கள் பாராட்டியதாகவும், வித்தியாசமான முயற்சி எடுத்துள்ள தங்களது அணிக்கு வாழ்த்து கூறியதாகவும் ரவி கூறியுள்ளார்.