நேர்கொண்ட பார்வை தொடர்ந்து நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் எச்.வினோத் மீண்டும் இணைகின்றனர். அதை தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவித்தார்.
தல60 என அழைக்கப்பட்டு வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என சில நாட்கள் முன்பு செய்தி பரவியது.
ஆனால் ரகுமான் தான் எந்த புது படத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை என பேட்டி அளித்துள்ளார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணிகள் அதிகம் இருப்பதால் இந்த முடிவு என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தல60 பற்றிய வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.