அவ்வளவுதானா பாகிஸ்தான்…? : ஓடி ஒளிந்த இம்ரான்…

கடந்த திங்கள் அன்று மாநிலங்களவையில் ஜம்மு–காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370- வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிரடியாக அறிவித்தார்.இதனை தொடர்ந்து உடனடியாக இதுதொடர்பான மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு ஆவேசமாக கருத்துக்களையும் வெளியிட்டது.

இதனை அடுத்து,இது குறித்து விவாதிக்க பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தை கூட்ட பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி அழைப்பு விடுத்திருந்தார். இன்று (ஆகஸ்ட் – 6) காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் எனவும், காஷ்மீர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் வீராப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பாராளுமன்ற கூட்டு குழு கூட்டம் தொடங்குவதற்கு முன்பே இக் கூட்டம் நிறுத்தப்பட்டது.சபாநாயகர் சொல்லாமல் கொள்ளாமல் தனனு அறைக்கு ஓடி ஒளிந்துவிட்டார்.

அதேபோல்,பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் அவைக்கு வராமல் புறக்கணித்துவிட்டார்.இதனால் ஆத்திரமடைந்த எதிர்கட்சிகள் ஆவேசமாக அவையில் ரகளையில் ஈடுபட்டனர்.இதனால் பாராளுமன்ற கூட்டு கூட்டம் நிறுத்தப்பட்டது.