முன்னாள் திமுக அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உடல்நலக்குறைவின் காரணமாக சிகிச்சை பலனின்றி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மறைந்தார்.
1996 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டசபைக்கு தேர்வானார். அப்போது அமைந்த கலைஞர் தலைமையிலான திமுக அரசில் மீன்வளத்துறை அமைச்சராக செயல்பட்டார்.
ஐந்து வருடங்கள் நடைபெற்ற தி.மு.க., ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றிய ஜெனிபர் சந்திரன், தி.மு.க., மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, அதற்கடுத்து நடைபெற்ற அ.தி.மு.க., ஆட்சியின் போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து 2004ம் ஆண்டில் ஜெனிபர் சந்திரன் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
அவருக்கு அ.தி.மு.க.வில், மாநில மீனவர் அணியின் இணைச் செயலர் பதவி வழங்கப்பட்டது. மேலும், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியும் அதிமுகவில் ஜெனிபர் சந்திரனுக்கு வழங்கப்பட்டது. பின்னர் 2010ல் மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
உடல்நிலை சரியில்லாமல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெனிபர் சிகிச்சை பலனின்றி இன்று மறைந்தார்.