அசத்தல் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்!!

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதற்க்கான வழிப்பாதை அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்காக மெட்ரோ நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது..

இந்த நிலையில், பயணிகளில் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 6 முதல் 8 கி.மீட்டர் தூரத்துக்கு செல்லும் வகையில் வாடகை கார் வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது. 10 ரூபாய் கட்டணத்தில் இந்த வசதியை மெட்ரோ ரயில் பயணிகள் எளிதில் பெறலாம். மெட்ரோ ரயில் பயண அட்டை மூலமாக இதற்கான பணத்தை செலுத்தலாம். செல்லும் இடம், நேரம், சீட் வசதி போன்றவற்றை மொபைல் ஆப் மூலம் வாடகை கார்களை புக் செய்யலாம்.

இந்த புதிய வாடகை கார் வசதியை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார். இந்த வாடகை காரில் ரூ.10 ரூபாய் கட்டணத்தில் 8 கி.மீட்டர் தூரம் வரை குறிப்பிட்ட இடங்களுக்கு பயணம் செய்யலாம். ஒவ்வொரு மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் குறைந்த பட்சம் 2 வாடகை கார்கள் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கும் இன்னும் 3 மாதங்களில் விரிவுப்படுத்த உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.