போதைப் பொருள் வழங்கினால் மட்டுமே, தனது குழந்தைக்கு தாய்ப் பாலூட்டுவேன் என தாயொருவர் அடம்பிடித்த சம்பவம் மின்னேரியா பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.
மின்னேரியா, பட்டபிலிகந்த பிரதேச வீடொன்றுக்குள் போதைப் பொருளை பயன்படுத்திய நிலையில், பெண்ணொருவரும் ஆண்கள் இருவரும் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனைடுத்து சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், குறித்த பெண்ணின் ஒரு வயதுக் குழுந்தை இன்று காலை தாயிடம் பால் கேட்டு அழுதபோது, தனக்கு போதைப் பொருள் வழங்கும் வரை குழந்தைக்கு பாலூட்ட மாட்டேன் என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குழந்தைக்கு பால்மாவை வழங்க பெண் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.