பிரபல ரிவியில் ஆறாவது வாரத்தினை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது போட்டியாளராக நேற்று ரேஷ்மா வெளியேற்றப்பட்டார்.
இன்று இடம்பெற்ற ப்ரொமோ காட்சியில் முகேனை அபிராமி கடுப்பேற்ற கோபத்தின் உச்சத்திற்கு சென்ற முகேன் கட்டிலை தனது கையால் ஓங்கி அடித்து பிக்பாஸ் பொருளை சேதப்படுத்திவிட்டார்.
முகென் இவ்வாறு பிக் பாஸ் வீட்டின் பொருளை சேதப்படுத்தியதால் தற்போது அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை அங்கு இருக்கும் பொருட்களை சேதப்படுத்தக்கூடாது என்பது விதி. ஆனால், முகென் வேண்டுமென்றே பிக் பாஸ் பொருளை சேதப்படுத்தியதால் அவரது தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.