பிக்பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டது எதிர்பாராத டிவிஸ்ட் என பார்வையாளர்கள் அனைவரும் கூறி வருகின்றனர்.
பெண்களை பேருந்தில் உரசியதாக கூறிய விவகாரத்தில் சரவணன் மன்னிப்பு கேட்டப் பிறகும் கூட திருப்திபடாத பிக்பாஸ் குழு, அவரை நேற்று அதிரடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றினர்.
இதனை சற்றும் எதிர்பாராத பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். கன்ஃபெஷன் ரூமில் இருந்தபடியே வெளியேற்றப்பட்டார் சரவணன். இதனால் ஹவுஸ்மேட்ஸ்களும் அதிர்ச்சியடைந்தனர்.
More twist in Saravanan eviction. Noticed that He was disrespectful with his answers to Kamal on weekend episodes and @EndemolShineIND didn’t like it, so he was then removed. #BiggBossTamil3 pic.twitter.com/71rakYoTdw
— Prashant Kumar (@acerprash) August 6, 2019
எனினும், பல்வேறு காரணங்களை பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். தற்போது குறும்படம் ஒன்றை நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளனர்.
அதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவன் கோர்த்துவிடுறான் என கமலை ஒருமையில் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கமல்ஹாசனையே ஒருமையில் பேசியதால் தான் சரவணன் வெளியேற்றப்பட்டார் என்பது நெட்டிசன்களின் கருத்தாகியுள்ளது. இந்நிலையில் அதுவும் தற்போது வைரலாகி வருகின்றது.
இதேவேளை, பிக்பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்றவரும் தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல், சரவணன் வெளியேற்றம் குறித்து டிவிட்டியுள்ளார்.