கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார் ஷெரின்.
அவர் தன்னுடைய வாழ்க்கையில் உள்ள சோகத்தை நேற்று பிக்பாஸ் போட்டியாளர்கள் முன்பு பேசினார். அவர் மூன்று வயது இருந்தபோது அவரது அப்பா சென்றுவிட்டாராம். அப்போது இருந்து அம்மா மட்டுமே இவரை வளர்த்துள்ளார்.
அதிகம் கஷ்டப்பட்டு இரண்டு மூன்று வேலைகள் செய்து தான் ஷெரீனை வளர்த்தாராம். “சின்ன வயது முதலே எனக்கு நண்பர்கள் என்று யாருமே இல்லை. lonely childஆக தான் இருந்தேன். எந்த நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் என்னுடைய அம்மாவிடம் தான் பேசுவேன். அவர் தான் என்னுடைய பெஸ்ட் ப்ரெண்ட்” என ஷெரின் பேசியுள்ளார்.