தலைவர் பிரபாகரனுடன் உணவருந்தியது தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்தவுக்கு தெரியாதா அல்லது மஹிந்தவுடன் தேநீர் அருந்தியது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தெரியாதா என தனது 60-வது பிறந்ததின நிகழ்வு தொடர்பான சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார் பிரபல ஊடகவியலாளர் வித்தியாதரன்.
மேலும் இன அழிப்பைச் செய்த ராஜபக்சவுக்கு 2010ம் ஆண்டு தேர்தலில் யாழ்பாணத் தமிழர்கள் ரோசம் இல்லாமல் 48 ஆயிரம் வாக்குகள் அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இப்படிப்பட்ட மக்களுக்காக போராடப் புறப்பட்ட இளைஞர்கள் தவறு செய்துவிட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
IBC- தமிழ் தொலைக்காட்சியின் ‘சக்கர வியூகம்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிறிலங்கா அரசியல்வாதிகளுக்கும் வித்தியாதரனுக்கும் இடையிலான உறவுகள், விடுதலைப் புலிகளுடனும், மகிந்த ராஜபக்சவுடனும் அவருக்கிருந்த உறவு நிலைகள் என்று பல விடயங்கள் பேசப்பட்ட நிகழ்ச்சியின் காணொளி இதோ.