மடகாஸ்கர் நாட்டில் பறக்கும் விமானத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட பிரித்தானிய இளம்பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2 வார காலமாக சுமார் 400 உள்ளூர் கிராம மக்களும் 15 பொலிசாரும் இந்த தேடுதலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் உள்ளூர் இளைஞர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில், அவர் கடிசியாக அணிந்திருந்த உடை, காலணி மற்றும் கூந்தல் நிறம் உள்ளிட்டவையை ஒப்பிட்டு, பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
தற்போது அந்த சடலத்தை காட்டுப்பகுதியில் இருந்து வெளியே கொண்டுவரும் முயற்சியில், கிராம மக்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் அங்கிருந்து 400 மைல்கள் தொலைவில் உள்ள மடகாஸ்கர் தலைநகருக்கு ஹெலிகொப்டரில் எடுத்து செல்லப்பட உள்ளது.
கடந்த ஜூலை 25 ஆம் திகதி பிரித்தானிய ஆசிரியர் 51 வயதான ரூத் ஜான்சன் என்பவருடன் குட்டி ரக விமானத்தில் மடகாஸ்கர் சென்றுள்ளார் 19 வயதான அலனா கட்லேண்ட்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவியான இவர் சம்பவத்தன்று கடலில் இருந்து சுமார் 1130 மீற்றர் உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருக்கும்போது, திடீரென்று குதித்துள்ளார்.
அவர் குதித்த பகுதியானது புலால் உண்ணும் ஃபோசா பூனைகள் மிகுந்த பகுதி என கூறப்படுகிறது.
அலனா ஏற்கெனவே ஐந்து முறை சித்தப்பிரமை தாக்குதல்களுக்கு உள்ளானவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.