16 வயது பேரனின் கத்திக்குத்தில் அம்மம்மா பலி!

வடமராட்சி கிழக்கில் தனது பேரனின் தாக்குதலில் மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார்.

அண்ணன், தம்பிக்கிடையில் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற சமயத்திலேயே அம்மம்மா உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இந்த சம்பவம் நடந்தது.

சுப்ரமணியம் கங்கேஸ்வரி (72) என்பவரே உயிரிழந்தார்.

நேற்றிரவு சகோதரர்களிற்கிடையில் மோதல் ஏற்பட்டது. மூத்த சகோதரனை கத்தியால் குத்துவதற்கு இளைய சகோதரன் முயன்றான். அதை தடுக்க முயன்ற அம்மம்மாவின் நெஞ்சில் கத்தி பாய்ந்தது. காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், வழியில் உயிரிழந்துள்ளார்.

16 வயது சுபாஸ் சஷிகரன் என்பவரே கத்தியால் குத்தினார். அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.