லுணுகலையிலிருந்து ஆத்மிகா நவரத்னராஜா எனும் மாணவி அப்பிரதேசத்தில் இருந்து மருத்து பீடத்துக்கு தெரிவாகி செல்லும் முதல் மாணவி என்ற பெருமையை பெற்றுள்ளார் .
லுணுகலை ஸ்ரீ/ ராமகிருஸ்ணா கல்லூரியில் ஆரம்ப கல்வியை கற்ற ஆத்மிகா தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் மாகாண ரீதியில் முதலமிடம் பெற்றவர்.
இவர், தரம் ஆறில் இருந்து உயர்தரம் வரை ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வியை தொடர்ந்த நிலையில் அங்கு சாதாரண தரத்தில் 9A சித்திகளைப்பெற்று, உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கற்றார்.
குறித்த மாணவி ஆத்மிகா மாவட்ட ரீதியில் 18 வது இடத்தைப் பெற்று யாழ்ப் பல்கலைக்கழகத்தில் வைத்திய துறைக்கு தெரிவாகியுள்ளமை மகிழ்வுக்கும், பெருமைக்கும் உரியதாகும்.
இந்நிலையில் மாணவி ஆத்மிகா நவரத்னராஜாவிற்கு பலரும் தமது வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்துள்ளனர்.