அக்மீமன பிரதேசத்தில் 10 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 80 வயதான 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைக்காட்சி பார்ப்பதற்காக வயோதிபரின் வீட்டிற்கு சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் வயோதிபர் மாத்திரம் இருந்த நிலையில் இவ்வாறு சிறுமியை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சிறுமி முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய கைது செய்யப்பட்ட முதியவர் நீதிமனறத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.