பேருந்தின் பெண்களை இடிப்பதற்காக சென்றதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சரவணன் பேசியதால் பெரிய சர்ச்சை உருவானது. அதை தொடர்ந்து பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் ஒரு வாரம் கழித்து இந்த பிரச்சனை காரணமாக சரவணனை வெளியேற்றியுள்ளனர். அவர் நேராக சேலத்தில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு சென்றுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் அவர் அடிக்கடி சொல்லிவந்த அவருடைய குழந்தைக்கு கடந்த மூன்று நாட்களாக கடும் உடல்நலக்குறைவு இருந்ததாம். சரவணனை பார்த்தது அது ஓரளவு சரியானது.
இந்த தகவலை சரவணனுடன் போனில் பேசிய நடிகர் பரணி தெரிவித்துள்ளார். பரணி பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போனில் பேசும் போது தனக்கு கெட்ட பெயர் வந்துவிட்டதாக கூறி அழுதுவிட்டாராம் சரவணன். இதில் வரும் பணத்தை வைத்து புது வாழ்க்கை துவங்கலாம் என இருந்தேன். இப்படி நடக்கும் என தெரிந்திருந்தால் நான் பிக்பாஸ் சென்றிருக்கவே மாட்டேன் என கூறி அழுதாராம் சரவணன்.