பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகை ரேஷ்மா தன் மீது அன்பு காட்டிய ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
தமிழில் சில படங்களில் தலை காட்டிய நடிகை ரேஷ்மா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு தனது வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும், தனது மகன் இறந்த சோகத்தையும் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார். இதனால், இந்நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் அவர் மீது அனுதாபம் கொண்டனர்.
எந்த வம்பு தும்புவிற்கும் செல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்த அவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. எனவே, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலரும் அவருக்கு ஆறுதல் கூறினர்.
இதற்கு பதில் கூறியுள்ள ரேஷ்மா ‘விஜய் தொலைக்காட்சி கொடுத்த வாய்ப்புக்கு நன்றி. இது ஒரு அருமையான பயணம். நிறைய அன்பு மற்றும் மரியாதை பெற்றுள்ளேன். உங்களின் ஆதரவுக்கு நன்றி. எனக்கு மெசேஜ் செய்த அனைவருக்கும், அன்புக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.