வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா நேற்றையதினம் மிகவும் பக்தி பூர்வமாக ஆரம்பமாகியது.
உலகம் முழுவதில் இருந்தும் கோடி பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்லும் நல்லூரான் ஆலயத்தில், தற்பொழுது இராணுவத்தின் பாதுகாப்பு கூடாரமாக மாறியுள்ளது.இந் நிலைமையானது, இலங்கை அரசின் இராணுவத்தின் பலவீனத்தைக் காட்டி நிற்கின்றதாக பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.ஆண்கள் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மேலாடைகள் இன்றி மிகவும் புனித்ததோடு வழிபடும் ஆலயத்தில், சப்பாத்துக் கால்களுடன் இவர்களின் கால் தடங்கள் சூழ உள்ளதைக் யார் கேட்பார்? பாரம்பரியமாக இந்துக்கள் கடைப்பிடிக்கும் சமயப் பண்பாடுகள் எங்கே தெரியப்போகின்றது இவர்களுக்கு?
இந்நிலையில் நல்லூரான் ஆலயத்திற்கே இவ்வாறு ஒரு பாதுகாப்பா அந்தளவிற்கு பாதுகாப்பற்ற ஒரு நாடா நம் நாடு? எனப் பலரும் அங்கலாய்த்து வருகின்றனர்.பாதுகாப்பில்லாத காஷ்மீர், சிரியா, ஏமன், போன்ற தாக்குதல் நடக்கும் பகுதிகளா? நம் தமிழர்தேசப் பிரதேசங்கள்… நல்லூரானின் வரலாற்றிலேயே, இல்லாதவாறு இம் முறை ஆலயத்திற்கு அதிகளவான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் இராணுவக் கெடுபிடிகளும், அதிகளவு காணப்படுகின்றதாகவும், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் இது என்ன முருகா…. சோதனை மேல் சோதனை என கவலை வெளியிட்டுள்ளனர்.