தனது கணவனால் விளைவிக்கப்படும் துன்பங்களை தாங்கமுடியாது மனமுடைந்து போன மனைவியொருவர், தனது மூன்று பிள்ளைகளுடன் இணைந்து தானும் துறவறம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
வெயாங்கொடை – வடத்தர பகுதியை சேர்ந்த இநோக்கா துலாணி என்ற 42 வயதான தாயொருவரே இவ்வாறு துறவறத்தை நாடுவதற்கு தீர்மானித்துள்ளார். குறித்த தாய் ஒரு பிள்ளையை பௌத்த துறவியாக்கியுள்ளதுடன், மற்றைய மகளை துறவியாக்க வெயாங்கொடை பகுதியை சேர்ந்த விகாரையில் கையளித்துள்ளார்.இந்நிலையில், தனது 14 வயதான பெண் பிள்ளையுடன் துறவு மடத்திற்கு செல்வதற்காக வெயாங்கொடை பொலிஸில் வாக்கு மூலத்தை வழங்குவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளார்.பொலிஸில் வாக்கு மூலங்களை வழங்கும் போது தனது கணவரால் ஏற்படும் துன்பத்திலிருந்து, விடுதலையாவதற்காக தான் பிள்ளைகளோடு கலந்து ஆலோசித்து தீமானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.