புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் பிள்ளைத்தெருவாசல் பகுதியை சார்ந்தவர் ராணி. இவருக்கு 13 வயதுடைய மகள் இருக்கிறார். சிறுமி அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். அங்குள்ள கூட்டுசேரி பகுதியை சார்ந்தவன் கலையமுது (வயது 27).
இவன் சிறுமியை சம்பவத்தன்று ஆசை வார்த்தை கூறி சென்னைக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமியை காணாது தேடி அலைந்த தாயார்., சிறுமியை காணாது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., கலையமுதுவின் அலைபேசி எண்ணை அறிந்து., அதன் மூலமாக சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில்., சிறுமி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பட்டாபிராமன் நகரில் சிறுமியை வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிறுமி இருக்கும் இருப்பிடத்தை அறிந்த காவல் துறையினர்., சம்பவ இடத்திற்கு விரைந்து கலையமுத்துவை கைது செய்து., அவனுக்கு உடந்தையாக இருந்த வானத்து நண்பன் சுரேஷ் என்பவனையும் கைது செய்தனர்.
இவன்கள் இருவரும் உபயோகம் செய்த காரும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில்., இந்த காம கொடூரன்களின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.