உலகையே திரும்பி பார்க்க வைத்த சிறுமி!

சிறுவயதில் தன்னுடைய தற்காப்பிற்காக பாலியல் குற்றவாளியை கொலை செய்த இளம்பெண் 16 வருடங்களுக்கு பின் இன்று சிறையிலிருந்து பரோலில் வெளியில் வந்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த சைண்டோயா பிரவுன் என்கிற இளம்பெண் தன்னுடைய 16 வயதில், ரியல் எஸ்டேட் முகவர் ஜானி ஆலனால் கடத்தப்பட்டு பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டார்.

2004ம் ஆண்டு அவருடைய தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாத பிரவுன், ஜானி ஆலன் துப்பாக்கியை திருடி அவரை சுட்டுக்கொலை செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரவுன் தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுடவில்லை என எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடி வெற்றி பெற்றனர். இதனால் 2006ம் ஆண்டில் முதல்தர குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரவுன் குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கானது உலகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் கிம் கர்தாஷியன் மற்றும் ரிஹானா துவங்கி பலரும் சிறுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை சூரிய உதயத்திற்கு முன்னதாகவே, தற்போது 31 வயதை அடைந்திருக்கும் பிரவுன் 10 ஆண்டுகள் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

விடுதலைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரவுன், “இவை அனைத்தையும் சாத்தியமாக்கிய கடவுளுக்கு முதலில் மரியாதை செய்கிறேன். அதே வேளையில், என் சார்பாகப் பேசி எனக்காகப் பிரார்த்தனை செய்த எனது பல ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

வரவிருக்கும் நாட்களில் என்னை ஆதரிக்க உள்ள மிகவும் நல்ல குடும்பம் மற்றும் நண்பர்களை பெற்றிருப்பதை நினைத்து நான் பாக்யசாலியாக உணர்கிறேன்.

துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எனது அனுபவங்களைப் பயன்டுத்தி உதவி செய்வேன்.

என் மீது நம்பிக்கை வைத்தமைக்கு ஆளுநருக்கும் முதல் பெண்மணி ஹஸ்லாமுக்கும் நான் நன்றி கூறுகிறேன். மேலும் இறைவனின் உதவியுடன் நான் அவர்களையும் எனது ஆதரவாளர்களையும் பெருமைப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.