பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் நான் நியூட்ரலாக இருந்து எந்த பிரச்சனையும் செய்யாமல் நாமினேஷனில் வந்த முதல் முறையிலேயே பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்தவர் ரேஷ்மா.
இவர், தமிழில் சில படங்களில் தலை காட்டி, இறுதியில் விமான பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அங்கு தனது வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும், தனது மகன் இறந்த சோகத்தையும் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார்.
இதனால், இந்நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் அவர் மீது அனுதாபம் கொண்டனர். எந்த வம்பு தும்புவிற்கும் செல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்த அவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த ரேஷ்மா பிக்பாஸ் வீட்டில் நடந்த பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது, பிக்பாஸ் வீட்டில் லைட் அணைக்கப்பட்ட பின் என்ன நடக்கும்? என தொகுப்பாளர் எழுப்பிய கேளிக்கு பதிலளித்த அவர் ‘லைட் அணைக்கப்பட்ட பின் நானும், மற்ற போட்டியாளர்களும் எங்களின் வேலைகளை முடித்துவிட்டு தூங்க சென்றுவிடுவோம். ஆனால், கவின், லாஸ்லியா, சாக்ஷி, அபிராமி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடிப்பார்கள். ஜாலியாக பாட்டு பாடி பொழுதை கழிப்பார்கள்’ என அவர் தெரிவித்தார்.