யாழ்போதனா வைத்தியசாலைக்கான MRI Scan இயந்திரம் கொள்வனவு செய்வதற்கான பகுதிக் கொடுப்பனவாக இரண்டு கோடி இலங்கை ரூபாக்களுக்கான காசோலையை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் Dr .சத்தியமூர்த்தி அவர்களிடம் கையளிக்கபட்டுள்ளது.
இந்த அன்பளிப்பினை சுவிஸ்லாந்திலுள்ள SKT நாதன் கடை உரிமையாளரான, திரு . நாதன் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
இன் நிலையில் இவர் போன்று இன்னும் பலர் இவ்வாறான நற் பணிகளை செய்ய முன்வர வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை யாழ்போதனா வைத்தியசாலைக்கான MRI Scan இயந்திரம் இல்லாமை தொடர்பில் எமது இணைய வழி ஊடாக கடந்த சில நாட்களிற்கு முன்னர் நாம் வெளிப்படுத்தி இருந்தோம்.
அதன் பயனாகவே யாழ்போதனா வைத்தியசாலைக்கான MRI Scan உதவி கிடைத்துள்ளது.
சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள் பெரியோர்கள். முடிந்தவர்கள் ,விரும்பியவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் இந்த நல்லகாரியத்திற்கு உங்களின் பங்களிப்பையும் இதில் இணைத்துக்கொள்ளலாம் என்பதையும் நாங்கள் உங்களிற்கு அறியத்தருகின்றோம்.