சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாபா படத்தில் மனிஷா கொய்ராலாவுக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் சந்தோஷி. அந்த பேமஸின் மூலமாக அரசி, இளவரசி, மரகத வீணை என தொடர்ச்சியாக சீரியலில் நடித்து வந்தார்.
அதன்பின் ஸ்ரீகரிகர் என்பவரை திருமணம் செய்தவர், சீரியலுக்கு சிறிது இடைவெளி விட்டு, தனது கணவருடன் பொட்டிக் ஒன்றை ஆரம்பித்து கவனித்து வருகிறார்.
இந்நிலையில் சந்தோஷிக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் ரகசியமாக வளைகாப்பு நடந்தது. அதன் போட்டோக்கள் அப்போதே வெளியானதை தொடர்ந்து சந்தோஷி- ஸ்ரீகரிகர் தம்பதிக்கு கடந்த திங்கட்கிழமை மதியம் அழகான இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது.
என் மனைவி மற்றும் இரட்டை பெண் குழந்தைகள் என மூன்று மகாலட்சுமிகள் எங்கள் வீட்டில் இப்போது இருக்கின்றனர் என ஸ்ரீகரிகர் கூறியுள்ளார்.