பெங்களூரில் மனைவி மீதான சந்தேகத்தால் கணவன் தனிமையில் விட்டுச் சென்ற காரணத்தினால் குழந்தையுடன் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் மாடலாக இருக்கிறார். இவரது கணவர் பங்கஜ். இந்த தம்பதிகளுக்கு 7 வயதில் மகள் இருக்கிறார்.
இந்நிலையில், ஜோதி மாடலிங் செய்து வருவதால் பங்கஜ் ஜோதி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்ததாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்னர் வழக்கம் போல சண்டை வரவே ஆத்திரத்தில் பங்கஜ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
மறுநாள் காலையும் அவர் வீடு திரும்பாததால் சோகமான ஜோதி அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போன் எடுக்காத காரணத்தினால்,
விரக்தியடைந்த ஜோதி அபார்ட்மெண்ட் மொட்டை மாடியில் இருந்து குழந்தையோடு குதித்துத் தற்கொலை செய்துள்ளார்.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.