மகள் பயிலும் கல்லூரியில் ஜூனியராக இருக்கும் தந்தை!

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் மகள் பயிலும் அதே கல்லூரியில் அவருக்கு ஜூனியராக தந்தை பயின்று வரும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக அந்த மாணவியே தமது தந்தை குறித்து சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், என் தந்தைக்கு சட்டம் குறித்தும், வழக்குகள், அவற்றின் விவரங்கள் குறித்தும் அறிய மிகுந்த ஆர்வம் உள்ளது.

அவருக்கு நீதிமன்றம் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவருக்கு சட்டம் படிக்க வேண்டும் என்கிற ஆசை. ஆனால், குடும்ப சூழல் காரணமாக அது நடக்கவில்லை.

அதனால் அவர் கன்ஸ்டல்டன்சியில் பணியாற்றினார். இரவு, பகல் பாராமல் எங்களின் படிப்பிற்காகவும், வாழ்க்கை தரத்திற்காகவும் உழைத்தார்.

எனது சகோதரி ஒரு மருத்துவர்ர். நானும், என் அண்ணனும் சட்டம் பயின்று வருகிறோம்.

எனது வகுப்புகள் குறித்து தினமும் விசாரிப்பார். எனக்கு அப்போதுதான் தோன்றியது. இது அவர் கனவை நனைவாக்கும் நேரம் என்பது. நீங்கள் நம்ப மாட்டீர்கள்.

இப்போது நானும், என் தந்தையும் ஒரே கல்லூரியில்தான் படிக்கிறோம். நிறைய மகிழ்ச்சியான தருணங்கள் கல்லூரியில் நடந்துள்ளன. அவரது ஆர்வத்தின்படி வகுப்புகளில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.