யாழ் கோப்பாய்- உரும்பிராய் வீதியில் சற்று முன்னர் கோர விபத்து… ஸ்தலத்தில் இளைஞன் பலி….!! கதறியழும் உறவினர்கள்..!

கோப்பாய்- உரும்பிராய் வீதியில் இரு மோட்டாா் சைக்கிள்கள் மீது டிப்பா் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா்.

இந்தச் சம்பவம் இன்று காலை உரும்பிராய் கிருஸ்ணன் கோவிலடியில் இடம்பெற்றது. சம்பவத்தில் இயக்கச்சியைச் சேர்ந்தவரே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது .மோட்டார் சைக்கிள் (எம்.டி90) ஒன்று சடுதியாக வீதியைக் கடந்த நிலையில், பிரதான வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிள் (பல்சர்) மோதி நிலைகுலைந்து டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு விபத்து இடம்பெற்றது என ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து, பல்சர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

எனினும், அவர் உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.