இலங்கையில் நடந்த கொடூரம்! இப்படி மோசமான வைத்தியர்களா?

வயிற்று வலிக்காக சிகிச்சை பெற சென்ற தாய் ஒருவர் 6 நாட்களின் பின்னர் உயிரிழந்த செய்தி ஒன்று மாரவில வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது

42 வயதான நாத்தண்டிய பிரதேசத்தை சேர்நத தேவிக்காக பிரியதர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் 4 பிள்ளைகளின் தாய் என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த வைத்தியசாலையில் அனுமதித்து 6 நாட்கள் சிகிச்சை வழங்காமல் 6வது நாள் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக கணவர் தெரிவித்துள்ளார்.

எனது மனைவிக்கு வயிற்றில் லேசான வலியிருந்தது. எனினும் நாட்கள் செல்ல செல்ல அதிகரித்தது. நான் இது குறித்து வைத்தியரிடம் கூறினேன். எனினும் அவர்கள் கண்டுக்கொள்ளவில்லை. இறுதியில் வலி அதிகரித்தது. நான் சென்ற கோபமாக பேசிய பின்னர் கொழும்பு வைத்தியசாலைக்கு அவர் மாற்ற தீர்மானித்தனர். எனினும் அம்பியுலன்ஸ் வண்டி இல்லை என கூறிய வைத்தியசாலை நிர்வாகம் என்னையும் வாகனம் ஒன்றை கொண்டுவருவதற்கு அனுமதிக்கவில்லை.

மனைவி வலியால் போராடும் போது, அவர்கள் உணவு பெற்றுக்கொள்ள சென்றுவிட்டார்கள். 6 மணித்தியாலங்களின் பின்னர் அம்பியுலன்ஸ் வண்டி ஒன்றினால் கொழும்பிற்கு மனைவி மாற்றப்பட்டார். எனினும் அங்கு அவர் உயிரிழந்துவிட்டார். மரண பரிசோதனையின் போது, மனைவிக்கு எவ்வித நோயும் இல்லை எனவும், சிறிய வருத்தம் ஒன்றே இருந்ததாக தெரியவந்தது என கணவர் தெரிவித்துள்ளார்.