மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சந்தோஷ் கோஷ் என்பவருக்கு சவுரனீல் கோஷ், என்ற மகன் இருந்துள்ளார். வேலூரில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில், அவர் ECE இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார்.
ஆம்பூர் அருகே, இருசக்கர வாகனத்தில் கடந்த 3 ஆம் தேதி சென்று கொண்டிருந்த போது அவர் சாலை விபத்தில் சிக்கி, பின்னர் அக்கம்பக்கத்தில் இருந்துவர்களால் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று திடீரென மூளை செயலிழப்பு எனும் மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன் வந்தனர்.
இதனை தொடர்ந்து மாற்று உடல் உறுப்புகளுக்காக, பதிவு செய்திருந்த மருத்துவ மனைகளுடன், தொடர்பு கொண்டு இதுகுறித்த தகவல்களை தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக வலது சிறுநீரகம் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் இதயம் மற்றும் நுரையீரல்கள் சென்னை மலர் மருத்துவமனைக்கும், கல்லீரல் அயப்பாக்கம் அப்பல்லோ மருத்துவமனைக்கும், வழங்கப்பட்டது. இதன் காரணமாக 6 நோயாளிகள் மறு வாழ்வு பெற்றுள்ளனர்.