உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர் ஓய்வு பெற்றார்! கோலியின் சாதனைகள் தப்பியது!

தென் ஆப்பிரிக்க அணியின் மூத்த வீரரும், நட்சத்திர வீரருமான ஹாஷிம் அம்லா அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சற்றுமுன் அறிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹாசிம் அம்லா தென் ஆப்பிரிக்கா அணிக்காக கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் களமிறங்கினார். மிக சிறப்பான தொடக்க ஆட்டக்காரரான ஹாசிம் ஆம்லா தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிரடியாக விளையாடி பல வெற்றிகளை குவித்து கொடுத்துள்ளார்.

மேலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடும் வீரர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். டெஸ்ட் போட்டிகளில் 124 போட்டிகளில் 215 இன்னிங்சில் ஆடி உள்ள ஆசிமம் 9282 ரன்களை 46.41 என்ற சராசரியில் வைத்துள்ளார். மேலும் அவருடைய டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமானது 311 ரன்கள் ஆகும். அதே போல் டெஸ்ட் போட்டிகளில் 28 சதங்களையும் 4 இரட்டை சதங்களும் அடித்துள்ளார். அதேபோல ஒருநாள் போட்டிகளை கணக்கில் கொண்டால் 181 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள ஹாசிம் அம்லா 178 இன்னிங்ஸ்களில் 8113 ரன்களை குவித்து வைத்துள்ளார். அவரின் தனி நபர் அதிகபட்சமாக 159 ரன்களை அடித்துள்ளார். மேலும் ஒரு நாள் போட்டிகளிலும் அவர் 27 சதங்களையும் 39 அரைசதங்களையும் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வரும் விராட் கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் செய்த சாதனையான அதிவேகமாக இரண்டாயிரம், மூவாயிரம், நான்காயிரம், ஐந்தாயிரம், ஆறாயிரம், ஏழாயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை, ஹஷிம் ஆம்லா சில போட்டிகளில் வித்தியாசத்தில் வரிசையாக முறியடுத்து வந்து கொண்டிருந்தார். இறுதியில் அவர் 2000 முதல் 7000 2 வரை அந்த சாதனையை அவர் பெயரில் வைத்திருந்தார். 8000 ரன்களை ஒரு இன்னிங்சில் அவர் தவறிவிட்டார். தற்போது ஓய்வு பெற்று உள்ளதால் இதன் பிறகு கோலியின் பெயரில் உள்ள 8000 9000 10000 11000 ரன்கள் ஆகிய சாதனைகள் தகர்க்கப்பட சில வருடங்கள் ஆகலாம்.

அதைப்போல ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இரண்டிலும் 25 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அசிம் அமுலாவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அம்லாவிற்கு முன்பாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், இலங்கையின் சகோதரா, இந்தியாவின் விராட் கோலி ஆகியோர் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். மேலும் தொடக்க ஆட்டக்காரராக மிகச்சிறந்த சராசரியை வைத்துள்ள வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரோகித் சர்மாவும், இரண்டாவது இடத்தில அம்லாவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களாக அவ்வப்போது சில சிறப்பான இன்னிங்ஸ்களை விளையாடினாலும் முன்பை போல தொடர்ந்து அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத காரணத்தினால், அவர் ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என தெரிகிறது. மேலும் அவர் நடைபெற்று முடிந்த உலக கோப்பை தொடரிலும் காயம் காரணமாக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்ந்த ஆசிம் ஆம்லா ஓய்வு வாழ்க்கை சிறப்பாக அமைய ஒரு வாழ்த்துக்களை கூறி விடலாம்..