வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த 4,82,319 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தை விட 9018 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 26,797 வாக்குகள் பெற்றார்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்ற கதிர் ஆனந்த, திமுகவின் மூத்த தலைவரும், பொருளாளருமான துரைமுருகனின் மகன் ஆவார், கதிருக்கு சொந்தமான குடோனில் இருந்து கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாக முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இரண்டாவது இடம் பிடித்த ஏ.சி சண்முகம் புதிய நீதி கட்சியின் தலைவர் ஆவார். இவர் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த நிலையிலேயே இவருக்கு வேலூர் தொகுதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
வேலூர் தேர்தலில் மூன்றாம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி கட்சியின் அடிமட்ட தொண்டராக சிறப்பாக பணியாற்றிய நிலையில் அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை சீமான் வழங்கினார்.
இரண்டாவது இணைப்பு
தற்போதைய 12 மணி நிலவரப்படி முன்னிலையில் இருந்த அதிமுக பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி திமுக 2,74,215 வாக்குகளையும், அதிமுக 2,64,132 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 13,942 வாக்குகளையும் பெற்றுள்ளது.
அதாவது திமுக 9000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது.
இதோடு நோட்டாவுக்கு இதுவரை 3,266 வாக்குகள் பதிவாகியுள்ளது
முதல் இணைப்பு
வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 38 மக்களவை தொகுதிக்கான தேர்தல் நடந்தது.
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் வேலூர் மக்களவை பொதுத்தேர்தல் கடந்த 5-ந் திகதி நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி அதிமுக – 90,608 வாக்குகளும், திமுக – 81,455 வாக்குகளும், நாம் தமிழர் – 4,183 வாக்குகளும் பெற்றுள்ளன.
அதன்படி ஏ.சி.சண்முகம் 9,153 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.